அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயது மாணவி பலி
அம்பாறை - கல்முனை மாவடிப்பள்ளி பெரியபள்ளி வாசலுக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் பயணித்துக் கொண்டிருந்த சிறுமியின் மீது தனியார் போக்குவரத்து பேருந்து ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
வியத்தில் சம்மாந்துறையை சேர்ந்த மாணவி ஒருவரே மரணமடைந்துள்ளார்.
இந்த விபத்து நடந்தவுடன் குறித்த பேருந்தின் சாரதி விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இந்நிலையில் தற்போது பேருந்தின் சாரதி காரைதீவு பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி காரைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
