எமது உரிமையினை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் -யாழ் மாநகர முதல்வர்

Jaffna Celebration Abdul Kalam Library
By Independent Writer Oct 15, 2021 07:38 AM GMT
Report

எமது உரிமையினை வெல்வதற்குப் பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ் இந்தியத்துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் பொதுசன நூலகத்தில் இன்று இடம்பெற்ற அப்துல் கலாமின் 90வது பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது உரிமை கோரிக்கையை வெல்வதற்குப் பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும்.  எமது தந்தை நாடு என்ற அடிப்படையில் நமக்கு துணை நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் விடுகின்றேன்.

ஒருபோதும் பாரத தேசத்தினுடைய நலன்களுக்கு முரணாக நாங்கள் செயற்படப் போவதில்லை. நாங்கள் பாரத தேசத்தினுடைய உறவுகளாகத் தொப்புள்கொடி உறவுகளாக அவர்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்காக அவர்களுடைய பொருளாதாரத்தை அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு தரப்பாக இந்த தேசத்தில் இருப்போம்.

எம்மைப் பொறுத்தவரைப் பாரத தேசம் என்பது எமது தந்தையர் நாடு. நாம் தந்தையர் நாடான பாரத தேசத்தினை பின்பற்றிச் செயற்படுகின்றோம். அதாவது தாய் தமிழகம் என்பது எமது தொப்புள்கொடி உறவுகளாக உள்ளனர்.

தென்னிந்தியா என்பது எமது தொப்புள் கொடி உறவுகள் வாழ்கின்ற இடமாகும். ஆகவே பண்பாட்டு ரீதியாகவும் பாரத தேசத்தை நாங்கள் பின்பற்றுகிறோம்.

எங்களுடைய அரசியல் கலாச்சாரத்திலும் பாரத தேசத்தினுடைய அரசியல் கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றோம்.  பாரத தேசத்தில் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தினை பின்பற்றுகின்றவர்களை அங்கே நினைவு கூருவதைப் போல இங்கேயும் நினைவுகூரும் பண்பாட்டைப் பின்பற்றி வருகின்றோம்.

குறிப்பாக இன்றைய விஜயதசமி நாளில் அப்துல் கலாமினுடைய நினைவு தினத்தில் பாரத தேசத்திற்கு ஒரு கோரிக்கையினை முன்வைக்க விரும்புகின்றேன். எமது நீண்டகால உரிமை கோரிக்கையினை பாரத தேசம் செவிசாய்க்க வேண்டும்.

நாம் தென்னிலங்கையில் இருக்கின்ற சிங்கள மக்களுக்கும் எதிரானவர்களல்ல நாங்கள் மற்றைய இனத்தை அழிப்பதற்காக எமது உரிமையினை கோரவில்லை நாங்கள் எம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக எம்மை வளர்த்துக் கொள்ள எமக்கு உரிமை வேண்டும் என கடந்த 60 வருடங்களாகப் போராடி வருகின்றோம்.

அந்த வகையில் பாரத தேசம் எமது கோரிக்கையினை நியாயமாகப் புரிந்து எமது கோரிக்கைகளை அடைவதற்குத் தன்னுடைய முயற்சி, அழுத்தங்களையும் அதனுடைய ஒத்துழைப்புகளையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் பாரத தேசம் தரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

ஏற்கனவே 13வது திருத்தச் சட்டத்தினை பெற்றுத்தந்தது இந்த பாரத தேசமே அந்த நன்றிக் கடன் எமக்குள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன், யாழ்ப்பாணப் பொதுசன நூலகம், பிரதம நூலகர் இந்திய துணை தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US