வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 89 இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சர்வதேச சிவப்பு அறிவித்தல்

CID - Sri Lanka Police Sri Lanka Police
By Dhayani May 28, 2026 11:32 AM GMT
Report

சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 89 குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார். 

பல்வேறு குற்றங்களுக்காக சிவப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர்.

இலட்சக்கணக்கானோரின் வங்கிக்கணக்குகளில் நாளை வைப்பிலிடப்படவுள்ள பெருந்தொகை பணம் - வெளியான அறிவிப்பு

இலட்சக்கணக்கானோரின் வங்கிக்கணக்குகளில் நாளை வைப்பிலிடப்படவுள்ள பெருந்தொகை பணம் - வெளியான அறிவிப்பு

பல்வேறு குற்றங்களுக்காக தடுத்துவைப்பு

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தலைமறைவாக இருந்த 8 குற்றவாளிகள் நேற்று (27) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.  

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 89 இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சர்வதேச சிவப்பு அறிவித்தல் | 89 Criminals Who Have Been Issued Red Notices 

இதேவேளை, கடந்த 22ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 19 சந்தேகநபர்கள் மற்றும் இரண்டு பெண் சந்தேகநபர்கள் உட்பட 21 பேர் அழைத்துவரப்பட்டுள்ளனர்.  

இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு, அதாவது 27ஆம் திகதி மேலும் 8 சந்தேகநபர்களை ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்த 8 சந்தேகநபர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் மற்றும் ஷார்ஜா பகுதிகளில் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களாவர். 

திட்டமிட்ட குற்றகும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு

இந்த சந்தேகநபர்களில் மூவர், திட்டமிட்ட குற்ற கும்பல்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, அங்கிருந்தவாறே இலங்கையில் சில குற்றச் செயல்களை இயக்கிய குழுவினர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 89 இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சர்வதேச சிவப்பு அறிவித்தல் | 89 Criminals Who Have Been Issued Red Notices

2024, 2025 மற்றும் 2026 ஆகிய இந்த மூன்று வருடங்களிலும் சிவப்பு எச்சரிக்கை மூலம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட 32 சந்தேகநபர்கள், அதேபோன்று பல்வேறு நாடுகளுடன் தொடர்புகொண்டு தற்போது பல்வேறு குற்றங்களைச் செய்து வரும் மேலும் 70 சந்தேகநபர்கள் இதுவரையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும் 89 சிவப்பு எச்சரிக்கைகள் தொடர்பில் பல்வேறு நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, எஞ்சியுள்ள சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள 89 சந்தேகநபர்களையும் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் துப்பாக்கிச்சூடு! அடுத்தடுத்து சிக்கிய வாகனங்கள் - வெளியான CCTV காணொளி

தென்னிலங்கையில் துப்பாக்கிச்சூடு! அடுத்தடுத்து சிக்கிய வாகனங்கள் - வெளியான CCTV காணொளி

வெசாக் தன்சல் ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

வெசாக் தன்சல் ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்




மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US