அம்பாறையில் 800 லீற்றர் டீசலை பதுக்கி வைத்த நபர் கைது
அம்பாறை ஆலையடிவேம்பு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சட்டவிரோதமாக கலன்களில் 800 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றிவரும் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
ஒருவர் கைது
பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த எரிபொருள் நிரப்புநிலையத்தை சம்பவதினமான நேற்று இரவு முற்றுகையிட்ட பொலிசார் கலன்களில் 800 லீற்றர் டீசல் நிரப்பபட்டு மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து மீட்டனர்.

இதில் அங்கு கடமையாறிவரும் இளைஞர் ஒருவரை கைது செய்ததுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan