தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் 8 இளைஞர்கள் கைது
திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல் தீவு பகுதியில் வீதியில் அனுமதிக்க முடியாத எட்டு மோட்டார் சைக்கிளுடன் எட்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (08.10.2023)இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிளானது போட்டிக்காக கொண்டு வந்ததாகவும் இதில் ஆறு மோட்டார் சைக்கிளுக்கு அனுமதிப் பத்திரம் இல்லை என்பதுடன் தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் எனவும் தெரியவருகிறது.
அத்துடன் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சுமார் 20 தொடக்கம் 25 வயதுடைய நீர்கொமும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைதான இளைஞர்களை உரிய மோட்டார் சைக்கிளுடன் திருகோணமலை நீதிமன்ற நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri