யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட பெண் குழந்தை ஒன்று நேற்று உயிரிழந்துள்ளது.
சாவகச்சேரி, மீசாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த கேதீசன் கிஷாரா என்ற 8 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு ஏற்கனவே ஆஸ்துமா நோய் உள்ளது.
மரண விசாரணை
இந்நிலையில் நேற்றையதினம் (22) பெற்றோர் குழந்தையை அழைத்துக்கொண்டு நேற்று பூநகரிக்கு சென்றவேளை மூச்சு எடுப்பதற்கு குழந்தை சிரமப்பட்டது.

பெற்றோர் குழந்தையை பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை வைத்தியர்கள் குழந்தையை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றினர்.
பின்னர் குழந்தை அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை குழந்தை உயிரிழந்தது.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 18 மணி நேரம் முன்
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri