இலங்கையில் இருந்து மொசாட் - CIA உளவு அமைப்புக்களால் எடுத்துச் செல்லப்பட்ட 700 தொலைபேசிகள்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் கடந்து விட்டன. இந்தநிலையில் இவர்கள் குறித்த காலப்பகுதியில் என்ன செய்தார்கள் என்பது தொடர்பாக ஊடகங்கள் பலவாறான தகவல்களை வெளிக்கொண்டு வந்தது.
பெற்றோல் விலை குறைப்பாக இருந்தாலும் சரி, ஐஎம்எப் தொடர்பான விடயங்களாக இருந்தாலும் எந்தவொரு நகர்வையுமே அநுர அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.
அந்தவகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எடுத்தால் இதிலும் எந்தவொரு நடவடிக்கையையும் அநுர தரப்பு மேற்கொள்ளவில்லை.
குறிப்பாக இந்த தாக்குதலில் 5 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவின் FBIயும், அவுஸ்திரேலியாவின் புலனாய்வு அமைப்பும், மொசாட்டும் இணைந்து அக்காலப்பகுதியில் வருகை தந்ததாக குறிப்பிடப்பட்டது.
இந்த புலனாய்வு அமைப்புக்கள் வருகை தந்ததோடு மாத்திரம் நின்று விடாது கிட்டத்தட்ட 700 இலத்திரனியல் சாதனங்கள் தொடர்பான ஆதாரங்களை கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பில் அறிக்கைகளை இலங்கைக்கு சமர்ப்பிக்கவில்லை.
இந்நிலையில், இலங்கைகக்குள் எந்தவொரு பிரச்சினை நடந்தாலும் அதற்குள் CIA, FBI இன் ஈடுபாடு தொடர்ச்சியாக இருந்து கொண்டு தான் இருக்கின்றது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அருஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
