இலங்கையில் 2 கோவிட் தடுப்பூசிகளும் செலுத்திய 700 பேர் மரணம்
இலங்கையில் கோவிட் இறப்புகள் பற்றிய கணக்கெடுப்பில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
செப்டெம்பர் மாதம் வரையில் ஏற்பட்ட மொத்த கோவிட் இறப்புகள் தொடர்பில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சுவாசப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர் நடுப்பகுதியில் 11699 மரணங்கள் தொடர்பில் கணக்கெடுக்கப்பட்டன. இதில் 714 பேருக்கு 2 தடுப்பூசிகளும் போடப்பட்டமை தெரியவந்துள்ளது. இது 6.01 வீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களுக்கு பல்வேறு உடல் நல பிரச்சினைகள் காணப்பட்டன. தொற்றா நோய் உள்ளவர்கள் தடுப்பூசிகளை பெற்ற போதிலும் உடல் நல பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். இதனாலேயே மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
