சதொச ஊழியர்களுக்கு 7 கோடி மேலதிக கொடுப்பனவு!வெளியான தகவல்
சுற்றறிக்கைகளுக்கு மாறாக லங்கா சதொச நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிக கொடுப்பனவு தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு சுற்றறிக்கைகளுக்கு மாறாக 7 கோடியே 46 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றறிக்கைகளுக்கு மாறாக மேலதிக கொடுப்பனவு
2019ஆம் ஆண்டு நிறுவன ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக வழங்கப்பட வேண்டிய தொகை 3000 ரூபாவாக இருந்த போதிலும், திறைசேரியின் அங்கீகாரம் இன்றி தலா 25000 ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 2, 2003 திகதியிட்ட பொது வணிகச் சுற்றறிக்கை எண்.12 இன் 6.5 இன் படி, மேலதிக கொடுப்பனவு செலுத்தும் திகதியில் ஆண்டு நிதிநிலை அறிக்கைகள் தணிக்கையாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதேவேளை சுற்றறிக்கைகளுக்கு மாறாக வழங்கப்பட்ட அறிக்கைகள் ஒரு வருடம் மற்றும் 6 மாதங்கள் தாமதமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
