திருகோணமலை மாவட்டத்தில் 60,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த நவம்பர் 25 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி மாலை 5.00 மணி வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம் காரணமாக, 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தினால் மொத்தமாக 18,734 குடும்பங்களைச் சேர்ந்த 60,458 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த பாதிப்பு 212 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பதிவாகியுள்ளது. பாதிப்பு விவரங்கள் (பிரதேச செயலகம் வாரியாக):
பாதிக்கப்பட்டு ஒரு விபரம் - பிரதேச செயலகம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நபர்கள் குச்சவெளி 5,339 17,866 கிண்ணியா 4,903 16,303 மூதூர் 4,731 14,419 வெருகல் 1,485 4,483 பட்டினமும் சூழலும் 518 1,839 தம்பலகாமம் 448 1,373 பதவிசிறிபுர 391 1,242 கந்தளாய் 278 951 சேருவில 270 776 கோமரங்கடவல 242 803 மொறவெவ 129 403 மொத்தம் 18,734 அதிகபட்சமாக குச்சவெளி பிரதேச செயலகத்தில் 17,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக கிண்ணியா பிரதேச செயலகத்தில் 16,303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உறவினர் வீடுகளில் 15,896 குடும்பங்களைச் சேர்ந்த 52,206 பேர் பஞ்சபடைந்துள்ளனர்.
34 இடைத்தங்கல் முகாம்களில் 2,838 குடும்பங்களைச் சேர்ந்த 8,252 பேர் வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக மொத்தமாக 493 வீடுகள் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் உடனடி நிவாரண உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவுகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.



