யாழில் தவறான முடிவெடுத்து 6 மாத கர்ப்பிணி உயிர்மாய்ப்பு!
யாழ்ப்பாணத்தில்(Jaffna) தவறான முடிவெடுத்து இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிர் மாய்த்துள்ளார்.
இதன்போது வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரகாஸ் பிருந்தா(வயது 26) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முரண்பாடு
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் ஆறு மாதங்கள் கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த 2ஆம் மாதம் 20ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகள்
இந்நிலையில் அயலவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றுமுன்தினம்(15) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் இன்றையதினம்(17) நடைபெறவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
வெங்கட் பிரபு படத்திற்காக சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா நடிகர் சிவகார்த்திகேயன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan