ஜூலை மாதம் இதை செய்ததன் பின்னணி என்ன தெரியுமா! இனவாதம்
இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளை ஒருங்கிணைந்து முன்னெடுக்கும் நோக்கில், 6 பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் புதிய அரசியல் கூட்டணியை அறிவித்துள்ளன.
இந்தநிலையிலே, இந்த புதிய அரசியல் கூட்டணியின் ஒன்றிணைப்பானது வெறுமையாக இருப்பதாக அரசியல் செயற்பாட்டாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்தோடு,இது மக்கள் விரும்பிய கூட்டிணைவு அல்ல.இந்தக் கூட்டணியால் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த அரசியல் ஒரு புதிய தளத்திலே இனவாதத்தை மட்டும் தான் சேர்க்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகாரப் பகிர்வு, தமிழ் மக்களின் உரிமைகள், தேசிய அரசியலில் இந்த கூட்டணியின் தாக்கம், எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் இந்த கூட்டணி இலங்கை அரசியலில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் குறித்து நேருக்கு நேர் நிகழ்ச்சியில் காணலாம்.