இலங்கையில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள 52 கும்பல்கள்
இலங்கையில் தற்போது குற்றச் செயல்களில் ஈடுபடும் 52 கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான குற்ற கும்பல்கள் செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
52 குற்ற கும்பல்களும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு
எனினும் இந்த கும்பல்கள் ஒவ்வொன்றும் ஒன்றாக செயல்பட்டு பின்னர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக பிரிந்து செயற்படுவதாக அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

சில கும்பல்கள் அவர்கள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 100 பொலிஸ் அதிகாரிகளை கடமைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல்வேறு தவறான நடத்தைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் ஆதாரங்களை பெற்ற பின்னர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri