கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத 5022 பேர் இதுவரையில் மரணம்
கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத ஐயாயிரத்து இருபத்து இரண்டு பேர் இதுவரையில் இலங்கையில் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் கோவிட் பெருந்தொற்று காரணமாக இதுவரையில் 5222 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5022 பேர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், 200 பேர் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
இதில் 177 பேர் தடுப்பூசியின் ஒரு மாத்திரை மட்டும் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு மாத்திரை தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட நிலையில் உயிரிழந்தவர்களுக்கு வேறும் நோய்கள் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
