டிட்வா சூறாவளி பாதிப்பு: பெருமளவான சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக யுனிசேப் அறிவிப்பு
டிட்வா சூறாவளி காரணமாக நாடு முழுவதும் 22 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 இலட்சம் பேருக்கு, அதிலும் 5,26,609 சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக யுனிசெப் கூறியுள்ளது.
டிசம்பர் 29 நிலவரப்படி 638 பேர் உயிரிழந்துள்ளனர், 175 பேர் காணாமல் போயுள்ளனர். 34,173 பேர் 358 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், 2,67,700 பேர் தற்காலிகமாக உறவினர் மற்றும் நண்பர் குடும்பங்களுடன் தங்கியுள்ளனர்.
தொடர்ச்சியான மழையால், குறிப்பாக பதுளை மாவட்டத்தின் 68% நிலப்பரப்பில் தொடர்ந்தும் நிலச்சரிவு அபாயம் அதிகமாக உள்ளது.
அவசியப் பொருட்கள் கொள்முதல்
இந்த நிலையில், யுனிசெஃப் 661,572 டொலர் மதிப்பிலான 55 அவசியப் பொருட்களை கொள்முதல் செய்துள்ளது.

அத்துடன், 286,427 டொலர் மதிப்பிலான கல்வி பொருட்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் வழங்கப்படவுள்ளன.
அதேநேரம், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உடனடி, உயிர்காக்கும் உதவிகளை வழங்க 7.8 மில்லியன் டொலர் தேவைப்படுகிறது.
இதில், டிசம்பர் 30 நிலவரப்படி 3.5 மில்லியன் டொலர் பெறப்பட்டுள்ளதுடன், 2.6 டொலர் மில்லியன் உறுதிமொழியாக வழங்கப்பட்டுள்ளதாக யுனிசெப் கூறியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam