நான்கு நாட்களில் மட்டும் பல கோடி ரூபா வருமானம்
கடந்த 4 நாட்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 5 லட்சத்து 20 ஆயிரத்து 403 வாகனங்கள் பயன்படுத்தியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் இயக்கம், பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 19 கோடி 61 லட்சத்து 19,425 ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.டி. கஹதபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாரத்தில் தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், அதிகளவில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியமையே இந்த வருமான அதிகரிப்பிற்குக் காரணமாகும்.
அதிகபட்ச வருமானம்
இதில் அதிகபட்ச வருமானம் ஏப்ரல் 10 ஆம் திகதி பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய தினம் மாத்திரம் 5 கோடி 98 இலட்சத்து 15,450 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. அத்துடன், அன்றைய தினம் 161,847 வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளதாகவும் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam