ஒரு வருடத்தில் 5 பயணங்கள்! 40 மில்லியனை செலவிட்ட ராஜபக்சர்கள்-செய்திகளின் தொகுப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் 2021 ஆம் ஆண்டு மட்டும் மேற்கொள்ளப்பட்ட ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களினால் அரசுக்கு சுமார் 40 மில்லியன் ரூபாய் செலவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் வழங்கிய விவரங்களின்படி, ராஜபக்ச சகோதரர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஐந்து உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்காக மொத்தம் 44, மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கிடைத்த விவரங்களின்படி, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பங்களாதேஷ் மற்றும் இத்தாலிக்கான இரண்டு வெளிநாட்டு விஜயங்களுக்காக சுமார் 36 மில்லியன்ரூபாய் செலவிட்டுள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியூயோர்க், கிளாஸ்கோ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கான தனது விஜயங்களுக்காக 7 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளார். இந்த விஜயங்களின் நோக்கம் ஜனாதிபதி செயலகத்தால் விளக்கப்படவில்லை.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகி்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam