எரிபொருள் பெற காத்திருந்த வாகனங்கள் மீது மோதிய பேருந்து: ஐந்து பேர் வைத்தியசாலையில் (Video)
மட்டக்களப்பு - ஊறணி பகுதியில் எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்த வாகனங்கள் மீது தனியார் பேருந்தொன்று மோதியுள்ளது.
இன்று காலை இடம்பெற்றுள்ள குறித்த சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து
ஊறணி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்திற்கு முன்னால் இன்று காலை வரிசையில் தரித்திருந்த வாகனங்கள் மீது வீதியில் பயணித்த தனியார் பேருந்தொன்று மோதியுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் காயமடைந்த ஐந்து பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதி தப்பியோட்டம்
விபத்தையடுத்து பேருந்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
