கொழும்பில் ஆபத்தான செயற்பாட்டில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் அதிரடியாக கைது
கொழும்பிலுள்ள சொகுசு ஹோட்டலில் இரகசியமாக தங்கி, இணையம் வழியாக பல கோடி ரூபாய் நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த சீனர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு முன்தினம் சிறப்புப் பொலிஸ் குழுவினர் அந்தச் சொகுசு ஹோட்டலை முற்றுகையிட்டு சிறப்புச் சோதனையை நடத்தினர்.
அப்போது, கைது செய்யப்பட்ட சீனர்களிடமிருந்து சுமார் 75 கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒன்லைன் குற்ற மோசடிகள்
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பல்வேறு நாட்டு பணங்கள் உட்பட சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான பணமும், அவர்கள் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்திய கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் எவ்வித விசா ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்து, இந்த ஒன்லைன் குற்ற மோசடிகள் மூலம் பல கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.