இலங்கை வரலாற்றில் மிக மோசமான அந்நிய செலாவணி வீழ்ச்சி
இலங்கை அடுத்த இரண்டு வாரங்களில் பொருளாதார ரீதியாக மோசமான வீழ்ச்சியை எதிர்நோக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardana) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
வரலாற்றில் மிக மோசமான அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ள சந்தர்ப்பத்தை தற்போது இலங்கை எதிர்நோக்கியுள்ளது. நாட்டில் தற்போது கையிருப்பில் இருக்கும் டொலர்கள் இரண்டு வாரங்களுக்கு கூட போதுமானதாக இல்லை.
இது வரலாற்றில் மிக மோசமான அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி.
அடுத்த இரண்டு மாத காலத்திற்குள் ஐந்து பில்லியன் டொலர்கள் கிடைக்காவிட்டால், நாட்டை முன்னெடுத்துச் செல்வது கடினம் என்பதுடன் நாடு வங்குரோத்து நிலைமைக்கு செல்லும்.
சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடனில் கொள்ளையிட முடியாது என்ற காரணத்தினால், அரசாங்கம், அந்த நிதியத்திடம் செல்ல தயக்கம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், நாட்டை முன்னேற்ற முடிந்த கட்சி ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே எனவும் கட்சி வரலாற்றில் இதனை நிரூபித்து காட்டியுள்ளது எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.





தலைவனா அவன், முட்டாள்... தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பற்றி விமர்சித்த பிரபல இயக்குனர் Cineulagam
