மின்னணு கடவுச்சீட்டு நடைமுறைக்காக 5.5 பில்லியன் ரூபாய் ஒப்பந்தம்
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வி திணைக்களம், தனது புதிய மின்னணு கடவுச்சீட்டு (e-passport) நடைமுறைக்காக,5.5 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக பெயர் வெளியிடப்படாதபோதிலும், இந்த ஒப்பந்தம் Thales DIS Finland OY மற்றும் அதன் இலங்கை பங்காளரான Just In Time (JIT) Technologies நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரட்டை குறியாக்க நடைமுறை
இந்த திட்டத்தின் கீழ், சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) Public Key Directory (PKD) உடன் இணைக்கக்கூடிய, இரட்டை குறியாக்க (two-key encryption) பாதுகாப்பு அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

முன்னதாக e-passport புத்தகங்கள் வழங்கும் ஒப்பந்தமும் இதே கூட்டணிக்கு வழங்கப்பட்ட நிலையில், தாமதம் காரணமாக தற்போது சாதாரண இயந்திர வாசிக்கக்கூடிய கடவுச்சீட்டுகள் (MRP) வழங்கப்பட்டு வருகின்றன.
இதனுடன், தேசிய அடையாள அட்டை (e-NIC) திட்டத்திற்காக ஐந்து மில்லியன் polycarbonate அட்டைகள் கொள்வனவு செய்யும் கேள்விப்பத்திர கடைசி நாள் மூன்றாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது.