100 நாட்கள் செயல்முனைவின் 45 ஆம் நாள் போராட்டம் வாகரையில்
வடக்கு - கிழக்கு மக்களுக்குக் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 45ஆம் நாள் போராட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்திலுள்ள இறாலோடைக் கிராமத்தில் இன்று நடைபெற்றது.
இறாலோடைக் கிராம கடற்கரையில் ஒன்றுகூடிய மக்கள், "எமக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு வேண்டும்", "எங்கள் நிலம் எமக்கு வேண்டும்", "நடமாடுவது எங்கள் உரிமை", "பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை", "ஒன்றுகூடுவது எங்கள் உரிமை", "எங்கள் நிலங்களை அபகரிக்காதே" போன்ற பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திக்கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

அத்துடன் இறாலோடை கிராமத்தில் பாரிய பிரச்சினையாக உள்ள குடிதண்ணீர் மற்றும் வீதிப் புனரமைப்பு தொடர்பாகவும் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் சிவில் அமையத்தின் இணைப்பாளர் ஜெ.கோபிநாத், சிவில் அமையத்தின் உத்தியோகத்தர் இ.ரமேஷ், சிவில் சமூகம் சார்ந்த செயற்பாட்டாளர்கள், பிரதேச மீனவ மற்றும் விவசாய சங்கத்தினர், பிரதேச அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam