யாழில் இரண்டாவது சங்கிலிய மன்னனின் 404 ஆவது சிராத்த தின நினைவேந்தல் (Video)
யாழ். இராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னனான இரண்டாவது சங்கிலிய மன்னனின் 404 ஆவது சிராத்த தின நினைவேந்தல் இன்று (11.06.2023) யாழ். நல்லூர்
முத்திரை சந்தியடியில் அமைந்துள்ள நினைவு தூபியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு இலங்கை சிவசேனை அமையத்தின் எற்பாட்டில், மறவன்புலவு சச்சிதானந்தத்தின் நெறிப்படுத்தலின் கீழ் சங்கிலிய மன்னன் நினைவுக் குழுவின் தலைவர் பா.பாலகணேசன் தலைமையில் நடைபெற்றது.
உருவச்சிலைக்கு மலர்மாலை
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன், மருதனார் மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய தர்மகர்த்தா இ.சுந்தரேஸ்வரக் குருக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு சங்கிலிய மன்னன் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நினைவேந்தலை அனுஷ்டித்தனர்.
இதில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஓய்வுநிலை விரிவுரையாளர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம், மதத்தலைவர்கள், மாநகர ஊழியர்கள், கலைஞர்கள், நலன்விரும்பிகள், ஊடகவியாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா
சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவு தினம் இன்று வவுனியா கற்குளத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
சிவசேனை மற்றும் கற்குளம் மகாவிஷணு ஆலயம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு மகாவிஸ்ணு ஆலய நீர் தடாகத்தில் இடம்பெற்றது.
தமிழில் மந்திரமோதி மோட்ச அர்ச்சனை செய்யப்பட்ட இவ் அஞ்சலி நிகழ்வில் சிவசேனை அமைப்பின் வவுனியா அமைப்பாளர் தமிழ்திரு அ. மாதவன் உட்பட கிராமத்தவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




