பங்களாதேஷில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம்: 40 இலட்சம் பேர் பாதிப்பு-உலக செய்திகள்
பங்களாதேஷ் கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பங்களாதேஷின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இடைவிடாது கடும் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன.
பங்களாதேஷில் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின் போது மழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.
இருப்பினும், கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தற்போது பாரிய மழை பெய்து வருகிறது.
மழை, வெள்ளத்தால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகள்