அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு! புதிய விலை விபரம்
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நான்கின் விலை இவ்வாறு குறைக்கப்படடுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய விலை விபரம்
இதன்படி, ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 25 ரூபா குறைக்கப்பட்டு, 1675 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 15 ரூபா குறைக்கப்பட்டு 165 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,
உள்நாட்டு சிவப்பரிசி 10 ரூபா குறைக்கப்பட்டு 169 ரூபாவாகவும்,
கோதுமை மா 5 ரூபா குறைக்கப்பட்டு 230 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 4 மணி நேரம் முன்

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri

மகனை தூங்கவிடாமல் 17 மணிநேரம் வீடியோ கேம் விளையாட வைத்த தந்தை! இப்படியும் தண்டனை வழங்கலாமா? News Lankasri
