கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான்கு சீனப் பிரஜைகள் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான்கு சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
10.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின் ஊடாக இந்த சிகரெட் தொகையை வெளியே கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.
சுங்க அதிகாரிகள்
இதன் போது, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 35 வயதுடைய நான்கு சீன வர்த்தகர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்கள் இன்று அதிகாலை 12.30 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து தாய் எயார்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சிகரெட் பெட்டிகள்
அவர்கள் கொண்டு வந்த 06 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவில் தயாரிக்கப்பட்ட 72,000 சிகரெட்டுகள் அடங்கிய 360 சிகரெட் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இவர்களைத் தொடர்ந்து தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan