வவுனியாவில் 4 கோடி பெறுமதியான சட்டவிரோத பொருட்கள் அழிப்பு
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட் 4 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் வவுனியாவில் நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த அரிசி, மஞ்சள், கொத்தமல்லி, நிலக்கடலை, உட்பட 7000 கிலோகிராம் உணவுப்பொருட்களும், சட்டவிரோத கிருமிநாசினிகளுமே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.
தண்டப்பணம்
குறித்த பொருட்கள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச எல்லைப்பகுதியில் வைத்து சுகாதார பரிசோதகர்களால் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுப்பத்தப்பட்டிருந்தது.
அவற்றை உடமையில் வைத்திருந்த நபர்களுக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய் தண்டப்பணம் நீதிமன்றால் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (07.02.2024) வவுனியா பம்பைமடுப்பகுதியில் வைத்து மேலதிக
நீதவான் ஜெ.சுபாஜினி, சிங்கள பிரதேசசபை செயலாளர் விமலவேணி நிசங்க, சுகாதார
பரிசோதகர்கள் முன்னிலையில் குறித்த பொருட்கள் அழிக்கப்பட்டது.











சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
