ஈரானின் மற்றுமொரு கப்பல் 180 பணியாளர்களுடன் இந்தியாவில்..!

India Iran Middle East
By Sajithra Mar 06, 2026 04:45 PM GMT
Report

இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஐஆர்ஐஎஸ் தேனா சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு இந்திய அதிகாரிகள் ஈரானிய கடற்படைக் கப்பலை கொச்சியில் நிறுத்த அனுமதித்ததாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

சர்வதேச கடற்படை மதிப்பாய்வைத் தொடர்ந்து, கொச்சியில் இருந்தபோது, ​​கப்பலில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதால், ஈரானியக் கப்பலான ஐரிஸ் லாவன் கொச்சியில் நிறுத்த அவசர அனுமதி கோரி கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அன்று ஈரான் இந்தியாவை அணுகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மார்ச் 1ஆம் திகதி ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் கப்பல் மார்ச் 4 ஆம் திகதி கொச்சியில் நிறுத்தப்பட்ட பின்னர், அதன் 183 பணியாளர்கள் தற்போது இந்திய கடற்படை தளங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு செல்வது மிக ஆபத்து! வெளியாகும் தகவல்கள் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு

இலங்கைக்கு செல்வது மிக ஆபத்து! வெளியாகும் தகவல்கள் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஏற்பட்ட பதற்றநிலை 

அண்மைய நாட்களில் இந்தியப் பெருங்கடலில் நடந்த நிகழ்வுகளுடன் தொடர்புடைய மூன்றாவது ஈரானிய கடற்படைக் கப்பலை இது உள்ளடக்கியிருப்பதால் இது கவனத்தை ஈர்த்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. 

ஈரானின் மற்றுமொரு கப்பல் 180 பணியாளர்களுடன் இந்தியாவில்..! | 3Rd Ship Iranian Vessel Iris Lavan In India

மார்ச் 4 ஆம் திகதி, இந்தியாவில் கடற்படைப் பயிற்சிகளில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் சர்வதேச நீரில், ஈரானிய போர்க்கப்பலான IRIS தேனா, அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலால் டார்பிடோவால் மூழ்கடிக்கப்பட்டது.

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டாவது ஈரானிய கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர், தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி கோரியது.

இலங்கை தனது பணியாளர்களை வெளியேற்றி, மனிதாபிமானக் கருத்தில் கொண்டு கப்பலை திருகோணமலைக்கு நகர்த்தியது.

ஐஆர்ஐஎஸ் தேனா அழிக்கப்பட்டதாலும், தற்போது இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள ஐஆர்ஐஎஸ் புஷேர் மற்றும் இந்தியாவில் ஐஆர்ஐஎஸ் லாவன் நிறுத்தப்பட்டுள்ளதாலும், ஒரே பிராந்தியப் பணியில் ஈடுபட்டுள்ள மூன்று ஈரானிய கடற்படைக் கப்பல்கள் இப்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் தகவல்களை பேசுபொருளாக்கியுள்ளது. 

போர் பதற்றத்தில் இந்தியா! ஈரான் கப்பல் விவகாரத்தில் அநுரகுமாரவின் முடிவு

போர் பதற்றத்தில் இந்தியா! ஈரான் கப்பல் விவகாரத்தில் அநுரகுமாரவின் முடிவு

அநுர தரப்பு உறுப்பினர்களின் வீடுகளில் பதுக்கப்பட்டுள்ள எரிபொருள் : கோட்டாபய காலத்தை நினைவுப்படுத்தி எச்சரிக்கை

அநுர தரப்பு உறுப்பினர்களின் வீடுகளில் பதுக்கப்பட்டுள்ள எரிபொருள் : கோட்டாபய காலத்தை நினைவுப்படுத்தி எச்சரிக்கை

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US