38 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
இலங்கையில் 6 மாவட்டங்களின் 38 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் 8 கிராம சேவகர் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 9 கிராம சேவகர் பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தின் 16 கிராம சேவகர் பிரிவுகளும், மாத்தளை மாவட்டத்தில் 3 கிராம சேவகர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவும், வவுனியா மாவட்டத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட நாம்பமுனுவ, கொரகாப்பிட்டிய, பெலன்வத்த வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
மொரட்டுமுல்ல காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட வில்லோரவத்தை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. மஹரகம காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட அரவ்வல மற்றும் பமுனுவ கிராமசேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் கட்டான காவல்துறை பிரிவுக்குட்பட்ட கே.சி.சில்வபுர கிராம சேகவர் பிரிவும், கதிரன வடக்கு கிராம சேவகர் பிரிவின் எட்டம்பகஹவத்தை பகுதியும் கதிரன தெற்கு காவல்துறை அதிகாரப் பிரிவின் பேசகர்மா பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
வத்தளை காவல்துறை அதிகாரப்பிரிவின் வத்தளை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட பனன்கம்மான கிராம சேவகர் பிரிவும் வவுனியா மாவட்டத்தில் பூவரசங்குளம் காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட குருக்கள்புதுக்குளம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
