அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 37ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் இன்று(13.07.2026) யாழ். பண்ணாகத்தில் உள்ள வலி. மேற்கு பிரதேசசபைக்கு முன்பாகவுள்ள அவரின் உருவச் சிலை முன்னாள் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தமிழர்களின் மூத்த அரசியல் தலைவரும் நாடாளுமன்றத்தின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கத்தின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பண்ணாகம் கிராம மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
