சீனாவிலிருந்து மேலும் 3 மில்லியன் தடுப்பூசிகளை பெறவுள்ள இலங்கை
சீனாவிலிருந்து மேலும் 3 மில்லியன் குப்பி சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை பெற உள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
சீன அதிகாரிகளுடன் மூன்று மில்லியன் குப்பி சினோஃபார்ம் தடுப்பூசிகளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைத்தவுடன் மற்ற மாகாணங்களில் தடுப்பூசி திட்டங்களைத் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்படாத நிலையில் சீன சினோபார்ம் தடுப்பூசியின் 600,000 குப்பிகள் நன்கொடை இலங்கைக்கு கிடைத்தது.
எவ்வாறாயினும், கடந்த வெள்ளிக்கிழமை உலக சுகாதார அமைப்பின் சினொர்பாமுக்கு
ஒப்புதல் அளித்த நிலையில் இலங்கையிலும் அதற்கு அங்கீகாரம் கிடைத்தது.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam