தமிழர் பகுதியில் தாயின் நெகிழ்ச்சி - சிசுவை போராடி காப்பாற்றிய வைத்தியர்கள்
அம்பாறை பொது வைத்தியசாலையில் 24 வாரங்களே ஆன குறைப்பிரசவ சிசுவொன்றின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
அம்பாறை பொது வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் திமுத்து சுபசிங்க மற்றும் விசேட வைத்தியர் லக்ஷான் ஆகியோரினால் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
மருத்துவத்தின் அற்புதங்களுக்கும், மனிதாபிமானத்தின் ஆசிகளுக்கும் மத்தியில் குழந்தை காப்பாற்றப்பட்டதாக சிசுவின் தாயார் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களின் முயற்சி
3 மாத கால சிகிச்சைக்கு பின், தனது தாயார் மஞ்சுளாவும் சிசுவும் நேற்று முன்தினம் அம்பாறை பொது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
40 வாரங்கள் தாயின் வயிற்றில் இருக்க வேண்டும் என்றாலும், 24 வாரங்களில் சிசு பிறப்பது மிகவும் ஆபத்தான குறைப்பிரசவமாக கருதப்படுகிறது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் சிசுவை பெற்ற தாய் திருமணமாகி 11 வருடங்கள் கழித்துதான் கர்ப்பமானார். நவீன இயந்திரங்களின் உதவியுடன் சிசு காப்பற்றப்பட்டுள்ளது.
நவீன சிகிச்சை
பிரித்தானியாவில் பயிற்சியை முடித்துக் கொண்டு அம்பாறை பொது வைத்தியசாலைக்கு வந்துள்ள சிறுவர் விசேட வைத்திய நிபுணர் திமுத்து சுபசிங்க குழந்தையை காப்பாற்றும் செயலில் முன்நின்றவராகும்.
இவ்வாறானதொரு பின்னணியில், சிசுவை படிப்படியாக இயல்பு நிலைக்குக் கொண்டுவர இந்த ஊழியர்களின் முயற்சி அளவிட முடியாததென குறிப்பிடப்படுகின்றது.