இந்த ஆண்டில் இதுரையில் வாகன விபத்துக்களில் 2381 பேர் பலி
கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த மாதம் 9ம் திகதி வரையில் வாகன விபத்துக்கள் காரணமாக 2381 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் இதுவரையில் உயிரை ஆபத்தை ஏற்படுத்திய 2257 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
இலங்கையில் வாகன விபத்துச் சம்பவங்களினால் சராசரியாக நாளொன்றுக்கு எட்டு பேர் வரையில் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வுhகன விபத்துக்களில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் இதுவரையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 850 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் காலப் பகுதியில் 5778 பாரதூரமான விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் சிறு விபத்துக்களின் எண்ணிக்கை 9572 ஆக பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விபத்துச் சம்பவங்ளினால் பாரியளவில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2025ம் ஆண்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2692 என்பது குறிப்பிடத்தக்கது.
கவனயீனமாக முறையில் வாகனங்களை செலுத்துவதனால் அதிகளவு விபத்துக்கள் பதிவாவதாக தெரிவிக்கப்படுகின்றது.