முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் 22ஆவது நினைவேந்தல்
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சிவசிதம்பரத்தின் 22ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
யாழ்ப்பாணம் நெல்லியடியில் அமைந்துள்ள சிவசிதம்பரததின் சிலையடியில் நினைவு தின நிகழ்வுகள் இன்று (06.05.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தல்
நினைவேந்தலில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் இந்தியாவில் சிகிச்சைக்கு பின்னர் நாடு திரும்பிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் கலந்து கொண்டார்.
முருகேசு சிவசிதம்பரம் (ஜுலை 20, 1923 - ஜுன் 5, 2002) இலங்கைத் தமிழ் அரசியலில் நீண்டகாலம் செயற்பட்டதுடன் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒரு வழக்கறிஞராவார்.
நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் 1968ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டு வரை
பணியாற்றியுள்ளார்.