பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! காதலியின் பிரிவினால் 22 வயது காதலன் செய்த விபரீத செயல்
பலாங்கொடை பிரதேசத்தில் காதலி இறந்து சில நாட்களின் பின்னர் தன்னால் வாழ முடியாது என இளைஞரொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் பலாங்கொட வெலிகேபொல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரணத்திற்கான காரணம்
குடும்ப பிரச்சினை காரணமாக குறித்த இளைஞனின் காதலி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடும் விரக்தியுடன் பொழுதை கழித்து வந்த இளைஞன் காதலியின்றி தன்னால் வாழ முடியாது என கூறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த இளைஞர் இறப்பதற்கு முன்னர் தனது காதலியின் பிரிவு குறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றினையும் பதிவேற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
