2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம்.. ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் நிறைவேற்றம்
ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று (19) நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் 18ஆவது சாதாரண சபைக் கூட்டம், சபையின் தவிசாளர் தலைமையில், உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் பங்கேற்புடன் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இறை வணக்கத்துடன் ஆரம்பமான இச்சபை அமர்வில், கார்த்திகை மாதத்தை முன்னிட்டு யுத்தத்தால் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கடந்த அமர்வின் கூட்டக் குறிப்புகள் சபையில் வாசிக்கப்பட்டு முறைப்படி உறுதிப்படுத்தப்பட்டதுடன், தவிசாளரின் விசேட உரையும் இடம்பெற்றது.
இன்றைய அமர்வில், 2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் கீழ் பிரதேச சபைக்கு வாகனம் கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு சபையில் பிரசன்னமாகியிருந்த அனைத்து உறுப்பினர்களும் தமது முழுமையான ஆதரவை வழங்கியதைத் தொடர்ந்து, அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மொத்தம் 317,886,400.00 ரூபா (31 கோடியே 78 இலட்சத்து 86 ஆயிரத்து 400 ரூபா) நிதி மதிப்பீட்டில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, பகிரங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam