டெல்லி தாக்குதல்... கைதான மருத்துவர் தொடர்பில் திடுக்கிடும் தகவல்!
டெல்லி வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட மருத்துவர் முஷம்மில் ஷகீல், இரண்டு மாதங்களுக்கு வெடிபொருட்களை சேமித்து வைப்பதற்காக வீடொன்றை வாடகைக்கு எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறைக்காக அவர் இந்திய மதிப்பில் 2,400 ரூபாயை வாடகையாக செலுத்தியுள்ளார்.
அதாவது, மாதத்திற்கு 1,200 ருபாய் என்ற அடிப்படையில், செப்டம்பர் 13 முதல் நவம்பர் 11 வரை இரண்டு மாதங்களுக்கு அறையை வாடகைக்கு எடுத்துள்ளார்.
மீட்கப்பட்ட பொருட்கள்
வாடகைக்கு எடுத்த வீட்டில் வெடிபொருட்களை வைத்துவிட்டு மீண்டும் அவர் அங்கு திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த வீட்டிலிருந்து சுமார் 2,900 கிலோகிராம் அளவான அம்மோனியம் நைட்ரேட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனம், ஒரு தாக்குதல் துப்பாக்கி மற்றும் ஒரு பெரிய ஆயுதக் கிடங்கும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
2000ஆம் ஆண்டு முதல் இதுவரை அதிக வசூல் செய்த இந்திய படங்கள் என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ Cineulagam