களுத்துறை மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகின..!
இறுதி முடிவுகள்
களுத்துறை மாவட்டத்தின் இரண்டாம் சுற்று முடிவுகளின் அடிப்படையில் சஜித் பிரேதமதாச வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 8,517 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 6,135
விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தின் முழுமையான முடிவுகள்
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 387,764 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 47.43 சதவீதமாகும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 236, 307 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 28.91 சதவீதமாகும்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 143, 285 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 17.53 சதவீதமாகும். பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 22,727 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இது அந்த மாவட்டத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 2.78 சதவீதமாகும். இந்த தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 1,024,244 ஆகும்.
16, 243 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 817,518 ஆகும்.
இதேவேளை, கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது களுத்துறை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டது.
அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ச 482,920 வாக்குகளை களுத்துறை மாவட்டத்தில் பெற்றுக் கொண்டார்.
இது அந்த மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் 59.49% சதவீதமாகும். இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணி கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச, களுத்துறை மாவட்டத்தில் மொத்தம் 284,213 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் இது அந்த மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் 35.01% சதவீதமாகும்.
மேலும் மக்கள் சக்திக்கான தேசிய இயக்கம் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க களுத்துறை மாவட்டத்தில் 27,681 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட நிலையில் இது அந்த மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் 3.41 சதவீதமாகும்.
பேருவல தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் பேருவல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க 44,146 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 39, 007 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 14,583 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2, 414 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த தேர்தல் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 130, 456 ஆகும்.
1,751 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 102, 804 ஆகும்.
மேலும், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 104, 555 ஆகும்.
பண்டாரகம தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார 60,752 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 33,363 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 21,996 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 3,573 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 387, 764 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 236, 307 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 143, 285 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 22,727 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
களுத்துறை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 52, 607 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 25, 006 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 17, 078 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,997 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
புலத்சிங்கள தேர்தல் தொகுதி
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 28,025 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 23,773 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 11,903 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,693 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அகலவத்தை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 34,139 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 29,833 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 13,518 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 3,117 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பாணந்துறை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 48,586 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 25,032 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 17, 641 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,666 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தபால் மூல வாக்குகள்
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் களுத்துறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 21,589 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,456 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 5,465 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 663வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். திலித் ஜயவீர 251 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த தேர்தல் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 37,348 ஆகும்.
763 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 35,959 ஆகும்.
மேலும், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 36,722 ஆகும்.