2023 இல் இவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள்: விஜித ஹேரத் சூளுரை
2023ஆம் ஆண்டு ஊழல்வாதிகளை இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கும் ஆண்டாக இருக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர்,நாடாளுமன்ற உறுப்பினர் பி.எம்.விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சவால்களை முறியடித்து வெற்றி

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாவிட்டால், அந்தத் தேர்தலுக்காக மக்களைத் திரட்டி போராடுவோம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஜே.வி.பி.க்கு சவால் விடுக்கும் அனைவரது சவால்களையும் முறியடித்து வெற்றியை பெறுவோம்.
மேலும் 2023ஆம் ஆண்டு ஊழல்வாதிகளை இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கும் ஆண்டாக இருக்கும்.”என தெரிவித்துள்ளார்.
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri