இராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகள்! வெளியான விபரம்
உலக நாடுகள் தங்கள் இராணுவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட பட்டியலின்படி, இராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. சென்ற ஆண்டில் அமெரிக்கா 877 பில்லியன் டொலர் (ரூ.72 லட்சம் கோடி) இராணுவத்துக்கு செலவிட்டுள்ளது.

சீனா மற்றும் ரஷ்யா
2ஆம் இடத்தில் சீனா 292 பில்லியன் டொலரும் (ரூ.24 லட்சம் கோடி) 3ஆம் இடத்தில் ரஷ்யா 86.4 பில்லியன் டொலரும் (ரூ.7.06 லட்சம் கோடி) இராணுவத்துக்கு செலவிட்டுள்ளன என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் இராணுவ கட்டமைப்புக்கான செலவு 81.5 பில்லியன் டொலராக (ரூ.6.68 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரையில் 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு சீனாவுடன் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.

தனது இராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்தியா
இதன் காரணமாக இந்தியா தனது இராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இராணுவத்துக்கு இந்தியா செலவிடும் நிதி 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
சீனா, பாகிஸ்தான் உடனான எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில் இராணுவத்துக்கான இந்தியாவின் ஒதுக்கீடு அதிகரித்துள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan