அதிருப்தியில் மொட்டு கட்சி: ரணிலுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பித்த பெயர் பட்டியலை உள்ளடக்கிய புதிய அமைச்சரவையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமிக்காவிட்டால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிருப்தி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நியமனம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் பதவி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் அக்கட்சி மிகவும் அதிருப்தியடைந்துள்ளதாக அக்கட்சியின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷான் விஜயலால் டி சில்வா கட்சி அலுவலகத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது கூறியுள்ளார்.

அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள் உட்பட புதிய அமைச்சரவை அமைக்கப்படாவிட்டால் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு இருக்காது என எஸ்.பி. திஸாநாயக்கவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அவசர நாடாளுமன்றத் தேர்தல் வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.