கறைபடிந்த நாள்! கலவர பூமியான இலங்கை (Video)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது கடந்த 9ஆம் திகதி ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நாடெங்கும் பரவிய வன்முறைகள் காரணமாக 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் 250 பேர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 232 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்த 9 பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், பிரதேசசபை தலைவர் ஒருவரும் உள்ளடங்குவதுடன் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளடங்குகின்றனர்.
இது தொடர்பான விரிவான தொகுப்பொன்றை இந்த காணியில் பார்க்கலாம்,
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri