மகிந்தவின் ஆதரவாளர்களுக்கு உயர் இடத்திலிருந்த வந்த தகவல்! அம்பலப்படுத்தப்படும் விடயம்
மைனாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கப் போவதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தான் உட்பட சுமார் 10 பேர் வரையிலானோர் அலரி மாளிகைக்கு அருகில் சென்றதாக பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி மகிந்தவின் ஆதரவாளர்களால், அலரிமாளிகைக்கு அருகிலும் காலிமுகத்திடல் பகுதியிலும் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுத்து வந்த மக்கள் தாக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து நாட்டின் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையில் அலரி மாளிகை பகுதியில் தாக்கப்பட்ட பெண்ணொருவர் தனது நேரடி அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தாக்க வேண்டாம் என தான் கூறியபோதும் என்னை பலர் தாக்கினர். என்னிடமிருந்த சிங்கக்கொடி கீழே விழுந்த நிலையில் அதனை நான் எடுக்க முற்பட்ட போது என்னை மிதித்து காயப்படுத்தினர்.
அத்துடன், உங்களை கொல்லுமாறு தான் எங்களுக்கு உயர் இடத்திலிருந்து தகவல் வழங்கியிருந்தார்கள் எனவும் தாக்கியவர்கள் தெரிவித்ததாக குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam