வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம்! ஒப்புதல் அளித்துள்ள பிரித்தானிய நிறுவனங்கள்
வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வை ஏற்படுத்துவதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்றன.
அந்தவகையில், பிரித்தானியா வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்துக்கு 100 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தன.
சம்பளம், சலுகைகள்
இந்த திட்டத்தால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவில் இந்த திட்டம் வெற்றிபெற்றுள்ள நிலையில், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை பிரித்தானியாவை சேர்ந்த 200 நிறுவனங்கள் நிரந்தரமாக நடைமுறைப்படுத்தி உள்ளன.
இந்த 200 நிறுவனங்களில் மொத்தமாக 5000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
வாரத்திற்கு 4 நாட்கள் பணிபுரிவதால் ஊழியர்கள் தங்களின் வாழ்க்கையை சந்தோஷமாகவும், நிறைவுடனும் வாழ முடியும் என தெரிவித்துள்ள நிறுவனங்கள், இது ஊழியர்களின் மனநலனையும் உடல்நலனையும் மேம்படுத்தும் எனவும் கூறியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan