மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்படவுள்ள இரண்டு பேர்
மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வெற்றிடமாக உள்ள இரண்டு நீதியரசர் பதவிகளை நிரப்புவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் நான்கு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான பிராங்க் குணவர்தன, ஆதித்ய குமார பட்டபெந்தி மற்றும் நவரட்ண மாரசிங்க ஆகியோரின் பெயர்களை பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ முன்மொழிந்துள்ளார்.
அதேநேரம்,துணை மன்றாடியார் நாயகம் ரியாஸ் பாரியின் பெயரை, சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, முன்மொழிந்துள்ளார்.
நீதியரசர்களாக நியமனம்
இந்தநிலையில் குறித்த நான்கு பெயர்களில் இரண்டை ஜனாதிபதி அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளார்.
மேன் முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் மன்றின் பதில் தலைவர் முகமது லஃபார் ஆகியோர் 63 வயதை எட்டியவுடன் அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ளனர்.
இதில் தற்போது தற்போது ஓய்வுக்கு முந்தைய விடுப்பில் உள்ள கருணாரத்ன, ஜூன் 16 அன்றும், லஃபார் ஜூன் 18 அன்றும் ஓய்வு பெறவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |