வெளிநாடொன்றில் தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி
தென் அமெரிக்க நாடான சிலியில்(Chile) இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் சாண்டியாகோவில் இருந்து வேக சோதனைக்காக 10 ஊழியர்களுடன் புறப்பட்ட பயணிகளின் புதிய தொடருந்து ஒன்றும் 1,500 டன் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு சரக்கு தொடருந்துமே புறநகர் பகுதியான சான் பெர்னார்டோ அருகே சென்றபோது நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் உயிரிழப்புக்களுக்கு மத்தியில் அரசியல் : தாக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி
மீட்பு படையினர்
இந்நிலையில் நேருக்குநேர் மோதியதில் பயணிகள் தொடருந்தின் ஒரு பெட்டி சரக்கு தொடருந்தின் மீது ஏறியுள்ளது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு 4 சீனர்கள் உள்பட 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தொடருந்தின் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மற்றொருபுறம் தொடருந்து பெட்டிகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது. அதன்படி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியவாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற நிலையில்., இந்த சம்பவத்தால் அங்கு பல மணி நேரம் தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தொடருந்து விபத்தில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி கேபிரியேல் போரிக் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |