இலங்கையில் புத்தாண்டில் நடந்த பெரும் சோகம் - இரு இளைஞர்கள் பலி - மூவரை தேடும் கடற்டை
இலங்கையில் நீர் தொடர்பான இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மூன்று பேர் காணாமல் போயுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மஹாவலி ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள சம்பவம் நேற்று மாலை பதிவாகி உள்ளது. மஹிந்தபுர பிரதேசத்தைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய சகோதரர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
தனது தந்தை மற்றும் மற்றுமொரு சகோதரனுடன் இணைந்து ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தனர். இதன் போது இவர்கள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாரிய தேடுதல்
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க கடற்படையின் உயிர்காப்புப் பிரிவினரும், சேருநுவர பொலிஸாரும் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, காலி - ஹபராதுவ கடற்கரைக்கு சுற்றுலா சென்ற இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை கடலில் நீராடிக்கொண்டிருந்த போது இவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
இந்த நிலையில், பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு கலுக்கல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 13 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri