எல்லே போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடம்: தேசிய மட்டத்திற்கு தெரிவு
பாடசாலைகளுக்கிடையிலான கிழக்கு மாகாண எல்லே போட்டியில் மாகாண மட்டத்தில் 1 ஆம் இடத்தினை பெற்று தேசிய மட்டத்திற்கு தகுதி பெற்ற மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு குறித்த பாடசாலையில் நேற்று (22.09.2022) இடம்பெற்றுள்ளது.
வாகனத்தில் பேரணி
குறித்த நிகழ்வானது பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள், பயிற்றுவிப்பாளர் நிலக்சன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஜெயப்பிரபா ஆகியோருக்கு மலர் மாலை அணிவித்து அதன் பின்னர் வாகனத்தில் பேரணியாக பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
கல்குடா கல்வி வலயத்திலுள்ள பிரதேச பாடசாலைகளில் ஒன்றான இந்த பாடசாலை மாணவர்கள் குறித்த போட்டியில் மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்று கடந்த 19,20 ஆம் திகதிகளில் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற மாகாணமட்ட போட்டியில் கலந்துகொண்டு முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
பல குறைபாடுகள்
குறித்த பாடசாலையில் பல குறைபாடுகள் இருக்கின்ற நிலையிலும் குறித்த மாணவர்கள் அவற்றை தாண்டி
மாகாண ரீதியாக சாதனை படைத்துள்ளதுடன் தேசிய ரீதியில் முதலாம்
இடத்தை பெற்று பாடசாலைக்கு பெருமை பெற்று தருவார்கள் என்கின்ற நம்பிக்கையில்
எமது பாடசாலை சமூகம் இருக்கின்றது என குறித்த பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
