கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் பயந்து - நடுங்கி ஒதுங்கிப்போக மாட்டோம்! ஹரீஸ்

Kalmunai Tamil nation alliance Srilamka
By DiasA May 03, 2021 10:33 PM GMT
Report

கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமாக சில நாட்களாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் சகோதர தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்னும் சிலரும் அரசியல் ரீதியாக உப பிரதேச செயலக விவகாரத்தில் முஸ்லிம் சமூகம் தங்களுக்கு அநீதி இழைத்துள்ளதாக கருத்துக்களை கூறி வருகின்றனர். அவர்கள் தொடர்ச்சியாக கல்முனை விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் மீது பலிபோடுவது போன்று தங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உண்மையில் கடந்த 1989 இல் அநீதி இழைக்கப்பட்டது முஸ்லிம் சமூகத்தினருக்கே. ஆனால் அந்த அநீதியை பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துடன் பேசி சரி செய்யமுன்வராமல் இன்னும் இன்னும் ஒரு பொய்யை ஆயிரம் தடவை சொல்லி உண்மையாக்க எத்தனிக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இது தெடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இது சம்பந்தமான கதையாடல்கள் வெளிவரும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தின் முக்கிய அரசியல்வாதிகள், முக்கிய சமூக செயற்பாட்டாளர்கள், விபரம் தெரிந்த எழுத்தாளர்கள் அவர்கள் கூறுவது அநியாயமான கதை என்பதை கண்டித்து பேசவோ அல்லது எழுதவோ முன்வராது தயங்குவது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு சிலர் இது சம்பந்தமாக அறிக்கைகள் விட்டுள்ளார்கள் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்து கொண்டு உதட்டளவில் இனநல்லிணக்கம் பேசுகின்றவர்கள் களத்தில் நின்றுகொண்டு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்படும் போது குறைந்தது வார்த்தைகளினால் அல்லது எழுத்துக்களினால் கூட கண்டிக்க முடியாதவர்களாக இன்றைய முஸ்லிம் சமூகத்தின் அவலநிலை காணப்படுகிறது.

அதிலும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வடக்கையும், கிழக்கையும் இணைக்க வேண்டும், கல்முனையை துண்டாட வேண்டும் என முஸ்லிம்கள் பற்றி எள்ளளவும் சிந்திக்காது பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். அவருடனான முகஸ்துதிக்காக சிலர் பவ்வியமாக கதையளக்கிறார்கள். இருந்தாலும் மக்கள் ஆணையை பெற்ற மக்கள் பிரதிநிதி என்றவகையில் என்னை இந்த நபர்கள் குற்றவாளி கூண்டில் நிறுத்தினாலும் நான் அதற்க்கெல்லாம் சிறிதும் சலனப்பட போவதில்லை.

இப்படியெல்லாம் சூழ்ச்சி செய்து அநியாயம் செய்வார்கள் என்பதனாலையே கடந்த பொதுத்தேர்தலை தொடர்ந்து இலங்கை அரசியலில் ஏற்பட்ட முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய போது இந்த முஸ்லிம் சமூகத்தையும், சமூகத்தின் முகவெற்றிலையான பிரதேசங்களையும் இப்படியான நபர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டிய சில முக்கிய தீர்மானங்களை எடுக்கவேண்டி ஏற்பட்டது. அதனாலயே இன்று அரசாங்கம் ஒருதலை பட்சமாக தீர்மானம் எடுக்காமல் இருக்கிறது.

எனவே இது சம்பந்தமாக மக்கள் கடந்த காலங்களில் நிராகரித்து ஒதுக்கியவர்களும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களும் என்னை கடுமையாக விமர்சித்து, தாறுமாறாக ஏசினாலும் சரி நானும், என்னுடைய சக நாடாளுமன்ற நண்பர்களும் அதற்கு பயந்து நடுங்கி ஒதுங்கிப்போக மாட்டோம்.

எங்கள் சமூகம் சார்ந்த நேர்மையான பணி தொடரந்து இடம்பெறும் நாங்கள் பார்வையாளர்களாக, பேசாதவர்களாக, செயற்படாதவர்களாக மௌனமாக இருக்கிறோம் என யாரும் கவலைப்பட தேவையில்லை.

எங்களை நம்பினோர் தைரியமாக இருக்கலாம். கல்முனை விடயம், அரசு எடுத்துள்ள முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் விடயங்கள் தொடர்பில் எமது முஸ்லிம் எம்.பிக்கள் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். எனவே எமது சமூகம் நம்பிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
33ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US