நாளொன்றுக்கு 1800க்கும் மேற்பட்ட புதிய வாகனங்கள் பதிவு!
நாளாந்தம் 1800க்கும் அதிகமான வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்படும் அதேவேளை அவற்றில் இருசக்கர வாகனங்களே கூடுதலாகப் பதிவு செய்யப்படுவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள பதிவுகளின் பிரகாரம் ஒவ்வொரு நாளும் நெடுஞ்சாலையில் 1,826 புதிய வாகனங்கள் சேர்க்கப்படுகின்றன.அவற்றில் 1,213 இருசக்கர வாகனங்கள் ஆகும்.மேலும் ஒவ்வொரு நாளும் 386 கார்கள் பதிவு செய்யப்படுகின்றன.
அதன் பிரகாரம், சாதாரண வேலை நேரங்களைக் கருத்தில் கொண்டால், ஒரு மணி நேரத்திற்கு 210-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், சுமார் 67 கார்களும் புதிதாகப் பதிவு செய்யப்படுகின்றன.
மின்சார வாகனங்கள் பதிவு
கடந்த மார்ச் மாதம் ஒரே மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. மார்ச் மாதத்தில் மட்டும் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 8,124 ஆகும்.

அதன்படி, ஒரு வேலை நாளில் சுமார் 370 மின்சார வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 15,488 ஆகும்.
அத்துடன் மார்ச் மாதத்திலேயே அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 57,518 வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதிய பதிவு
ஜனவரியில் 55,237 புதிய வாகனங்களும், பிப்ரவரியில் 51,613 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 மாத காலத்தில் 10,945 முச்சக்கர வாகனங்களும், 2,169 இருபயன்பாட்டு வாகனங்களும் மற்றும் 1,415 பயணிகள் பேருந்துகளும் புதிதாகப் பதிவு செய்யப்பட்டு போக்குவரத்து அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

பெரிய கார்கள் மற்றும் இருபயன்பாட்டு வாகனங்கள் வாகன விற்பனையகங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதோடு, மின்சார கார்களுக்கும் பெரிய அளவிலான கேள்விகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri